பயமாக இருந்தது : நான் அதை மறக்க மாட்டேன் : கொரோனா நோயாளியின் சிகிச்சை குழுவில் இருந்த பெண் செவிலியர்!!

561

கேரளாவில் கொரோனா வைரஸால் பா திக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டோர் உ யிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 60,000-க்கும் மேற்பட்டோர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் எளிதாக ஒருவரிடமிருந்து பரவுவதால், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் மருத்துவர்கள், தங்கள் உ யிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பா திப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் இரண்டு பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனாவின் பா திப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் Alappuzha Medical College மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபர் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் க ண்காணிப்பில் தனியாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இதில் நோயாளியை கவனிப்பதற்காக செவிலியர்களில் ஒருவரான Mridula என்பவர் இருந்தார். அவர் இந்த அனுபவம் குறித்து கூறுகையில், இந்த அனுபவத்தை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று கூறுவேன்.

ஏனெனில் உலகில் தற்போதைய ப யங்கரமான நிலை என்ன என்பது எனக்கு தெரியும். ஆறு நாட்கள் குறித்த நோயாளியை கவனித்து வந்தோம். எங்கள் ஷிப்ட் நான்கு மணி நேரமாக ஒதுக்கப்பட்டது. குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் நான்கு மணி நேர ஷிப்ட் படி வேலை செய்தோம்.

நாங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை, மருத்துவமனையின் விடுதி, விடுதியை விட்டால் மருத்துவமனை என்றே இருந்தோம்.

இதில் என்னை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள், 12 பி.ஜி மருத்துவர்கள், ஒன்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள், எட்டு செவிலியர்கள், ஆறு செவிலியர் உதவியாளர்கள் மற்றும் ஒன்பது துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் கூறி நிலைமை குறித்து அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் எனக்கு ப யம் இருந்தது.

வேலைக்கு சேர்ந்த ஐந்து மாதங்களிலே இப்படி ஒரு சூழல் என்பதால் கொஞ்சம் ப யம் இருந்தது. என் குடும்ப உறுப்பினர்களும் ப யந்தனர். நிபா வைரஸால் உ யிரிழந்த லினியும் என்னுடைய நினைவுக்கு வந்ததாக கூறினார்.

இந்த வேலைக்கு பின் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் சோ தனை செய்யும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் தன்னுடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டதால் மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்தார்.

இந்த சிகிச்சைக்கு பின் அவர் கடந்த வெள்ளிக் கிழமை வீடு திரும்பினார். இது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வைரஸை எதிர்த்து போ ராடிய கூட்டு முயற்சி என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போது, லினி என்ற செவிலியர் குறித்த வைரஸால் பா திக்கப்பட்டு உ யிரிழந்தார். இதனால் இந்த சிகிச்சையின் போது லினி நினைவுக்கு வந்ததாக மிருதுலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.