ஐஸ்வர்யா
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் ஓவியா வைரலாக பேசப்பட்டார். இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா செய்த சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கினார்.
நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
ஐஸ்வர்யா வீட்டிற்குள் இருக்கும் போது அவரது காதலன் கோபி குறித்து அதிர்ச்சி தகவல் வந்தது. அவர் பலரின் பணத்தை மோசம் செய்து சிறைக்கு சென்றிருக்கிறார். அவரின் இந்த வேலையில் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா, கையில் பச்சை குத்தியிருப்பது கோபி, நானும் அவரும் காதலித்தோம். அவரின் சொந்த வேலைகள் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, அந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன். இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம் என கூறியுள்ளார்.