பள்ளித்தோழனுடன் ஏற்பட்ட தவறான நட்பு : 6 பேருடன் சேர்ந்து படுக்கையில் கணவனை கொன்ற மனைவியின் அதிர்ச்சி!!

1233

தவறான நட்பு

வேலூர் மாவட்டத்தில் மாடு வியாபாரம் செய்து வந்த அக்பர் என்பவர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவரது கொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன,

அக்பருக்கு திருமணமாகி ரியானா என்ற மனைவியும் 3 வயது மகனும் உள்ளனர். இவர் கடந்த 7 ஆம் திகதி ழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்பரின் மனைவி ரியானா அவரது கள்ளக்காதலனும், பள்ளித்தோழனுமான காலித் அகமதுடன் சேர்ந்து 6 இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவரது வீட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு பின்னர் பிரேதத்தை நெடுஞ்சாலை ஓரமாக வீசிச்சென்றது அம்பலாமாகியுள்ளது.

காலித் அகமதுவுக்கும் ரியானாவிற்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. ரியானாவுடன் தனியாக வசித்து வந்த அவரது கணவரான அக்பருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் நிறுத்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார்.

காதல் கண்ணை மறைக்க ஆத்திரமடைந்த காலீத் அவனது நண்பர்களான வாலாஜாப்பேட்டை சேர்ந்த சதீஷ் என்ற சலூன் தொழிலாளியுடன் சேர்ந்து அக்பரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக, ரூ.6 லட்சம் தொகை கொடுத்து சுமார் 5 பேரை ஏற்பாடு செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். ரியானாவின் வீட்டிற்கு கூலிப்படையுடன் சென்ற காலீத் அகமது, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அக்பர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளனர்.

அக்பர் துள்ளும்போது அவரது கால்களை மற்றவர்கள் பிடித்து அமுக்கியுள்ளனர். அவர்களுக்கு அக்பரின் மனைவி ரியானாவி உதவி செய்துள்ளார். அவர் இறந்தது உறுதியானவுடன் அவரது சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனர்.

பின்னர், பிரேதத்தை வன்னிவேடு அருகே நெடுஞ்சாலை ஓரமாக வீசிவிட்டு விபத்தில் இறந்தது போல செட்டப் செய்துவிட்டு கொலையாளிகள் காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரியானா மற்றும் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகியோரை வாலாஜாப்பேட்டை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.