பழம் பெரும் தமிழ் இயக்குனர் மரணம்: அதிர்ச்சியில் சினிமா துறை!!

662

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்.தமிழ் திரைப்பட பலம் பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன்(88), இன்று சென்னையில் காலமானார்.

அக்டோபர் 31-ஆம் திகதி 1929-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்த் திரைப்பட பலம்பெரும் இயக்குநர் ஆவார்.சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேஷ், ஜெயசங்கர், போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 100-ஆவது படமான சூர்யகாந்தி உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்.

ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தை இயக்கியதும் இவர்தான். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.