பாலியல் சீண்டல் செய்தவரை செருப்பால் அடித்த நடிகை கஸ்தூரி : அடிவாங்கி ஒளிந்துகொண்ட பிரபலம்!!

1038

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் எப்போது துடிப்பாக இருப்பவர். சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்காக குரல் கொடுத்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபகாலமாகவே Me too மூலம் சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அதில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களையும் போட்டு உடைத்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?” என கேட்டுள்ளார்.

இதற்கு அவர் “அதை சொல்ல தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர்.

இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது” என கூறினார்.