இளம்பெண் தற்கொலை வழக்கில் பொலிஸார் சிக்கிய பின்னணி
சென்னையில், விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவேன் என பொலிஸார் மிரட்டியதால் தான் தற்கொலைக்கு முயன்றேன் என திருவேற்காடு பெண் வாக்குமூலம் கொடுத்துள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு செந்தமிழ்நகரை நகரை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி ரேணுகா. தன்னுடைய வீட்டில் பாத்ரூம் காட்டும் வேலை நடைபெற்ற பொழுது, பக்கத்து வீட்டு பெண் அமிர்தவள்ளியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அமிர்தவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலரின் பேச்சை கேட்டுக்கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ரேணுகா, உடனடியாக காவல்நிலையத்திற்கு முன்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தி குளித்தார். இதனையடுத்து விரைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும்போது, ரேணுகா தன்னுடைய தந்தையுடன் போனில் பேசும் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கவுன்சிலர், சேர்மேன் ஆகியோரிடம் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை விபசார வழக்கில் கைது செய்துவிடுவேன் என்று மிரட்டினார்கள். அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன் என கூறியுள்ளார்.
இந்த உரையாடல் வெளியானதை அடுத்து ஆய்வாளர் அலெக்சாண்டர், எஸ்.ஐ. சரவணன் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.