பா.பிரசன்னாவிற்கு இளங்கலைஞர் விருது!!

343

முல்லைத்தீவு மாவட்டத்தில் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற பண்பாட்டுப் பெருவிழாவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கிய வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மணிவண்ணன் உமாமகள், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

பாலகாந்தன் பிரசன்னா சிறந்த ஓவியர் மற்றும் பாடகர் மட்டுமன்றி சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார்.