பிக்பாஸ் நாயகிக்கு பெண் பெயரில் பாலியல் அழைப்பு… கடும் கோபத்தில் வைஷ்ணவி!!

692

பிக்பாஸ் வைஷ்ணவி

பெண் பெயரில் பாலியல் அழைப்பு வருவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேடியோ வர்ணணையாளர் வைஷ்ணவி வேதனை தெரிவித்துள்ளார். சம்பந்தபட்ட நபர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேடியோ வர்ணணையாளர் வைஸ்ணவி பிரசாத்..! முகநூலில் அனு என்ற பெயரில் வைஷ்ணவியிடம் அறிமுகமான ஒரு நபர், கடந்த சில தினங்களாக இவரது அழகை புகழ்ந்து குறுந்தகவல்கள் அனுப்பியுள்ளார்.

தன்னுடைய பெயர் அனு என்றும் தாம்பரத்தில் இருப்பதாகவும் பதிவிட்ட அந்த பெண் பெயர் கொண்ட நபர் பாலியல் ரீதியாக உறவுக்கு அழைத்து குறுந்தகவல் அனுப்பியதால் வைஷ்ணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த குறுந்தகவல் குறித்து தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி, சம்பந்தப்பட்ட நபர் மீது 377 வது இந்திய தண்டனை சட்டப்பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

முக நூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளில் பெண்களிடம் பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்கள் பெயரில் போலியான கணாக்குகளை தொடங்கி அதன் மூலம் பெண்களிடம் சாட்டிங் செய்வதை பொழுது போக்காக செய்து வருகின்றனர். அந்தவகையில் எதோ ஒரு நபர் தான் அனு என்ற பெயரில் வைஷ்ணவிக்கு பாலியல் அழைப்பு விடுத்திருக்க கூடும் என கூறப்படுகின்றது.

இது போன்று தகவல் தொழில் நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தி, பாலியல் தொடர்புக்கு அழைப்பு விடுத்து பதிவிடும் நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் மட்டுமே உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதை விடுத்து டிவிட்டர் மற்றும் முகநூலில் பாலியல் தொல்லை குறித்து பதிவிடுவதால் எந்த நன்மையும் விளைந்து விடாது.

உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நபர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் தகுந்த ஆதாரங்களோடு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்.

இதை எப்படி வெளியில் சொல்வது என்று உள்ளுக்குள் கலங்கி… மனதளவில் புழுங்கி…. தவித்த பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக வெளியே சொல்ல முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில் அந்த புகார்களை காவல்துறை வசம் தெரிவித்தால் மட்டுமே குற்றவாளிக்கு தண்டணையும், பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்கும்.