ரித்விகா
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளாராக பங்கேற்று ரித்விகா வெற்றிப் பெற்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவரின் அமைதி மற்றும் பொறுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று கூறலாம். இந்நிலையில், இவர் குறித்த பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாகவே வெளியாகியுள்ளது.
இவரை பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு அனுப்பியது நடிகர் சூரியாவாம். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகர் சூரியா தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூரியாவுக்கும் பிரபல தொலைக்காட்சிக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது. அவர் கூறியதால்தான் இந்த வாய்ப்பு நடிகை ரித்திவிகாவுக்கு கிடைத்துள்ளது.
ரித்திவிகாவின் தந்தையும் சூரியாவின் தந்தையும் சிறுவயதில் இருந்து நண்பர்களாம். ரித்திவிகா மற்றும் சூரியா, கார்த்தி எல்லோரும் நண்பர்கள். இதனால் தான் ரித்திவிகாவுக்கு சூரியா இந்த வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளார். ரித்திவிகாவுக்கு பெற்றுக் கொடுத்த வாய்ப்பை வெற்றி பெற்று நல்ல விதத்தில் அவர் பயன்படுத்தியுள்ளார்.
உண்மை, பொய் என்ற ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போலவே பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டியாளர்களான ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா இருந்துள்ளார்கள். உண்மைக்கு வாக்களித்து மக்கள் வெற்றியாளரை தெரிவு செய்துள்ளனர் என்பது பலரின் கருத்தாக உள்ளது.