நியாயமாக இருந்தால் அதுவும் சில நேரம் தோற்றுவிடும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யாவிற்கு ஆதரவாக பிரபல பாடகர் க்ரிஷ் கூறியுள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது 30 நாட்களையும் தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்கு மூலம் வெளியேற்றப்படுவர்.
அதாவது எலிமினேசனில் இருக்கும் பிரபலங்களுக்கு, மக்கள் ஓட்டுப் போடுவார்கள். அதில் யார் அதிக ஓட்டு பெறுகிறார்களோ அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பர். குறைந்த ஓட்டு பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.
அந்த வகையில் இந்த வாரம் அதாவது இன்று யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாடகியான ரம்யா குறைவான ஓட்டு பெற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிரபல பாடகர் க்ரிஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரம்யாவுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்து, அதில் நியாயமாக இருந்தால் அதுவும் சில தோற்றுவிடும் என்று ரம்யாவிற்கு ஆதரவாக பதிவேற்றம் செய்திருந்தார்.
இதைக் கண்ட ரம்யா, இதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும் ரசிகர்கள் சிலர் இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை, டி.ஆர்.பிக்காகவே தான் இப்படி நடக்கிறது. ரம்யா உண்மையாக நல்லவளாக நடந்து கொண்டாள் என்று ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.