தொலைக்காட்சி நடிகைகளை பார்த்து, பின்னழகை மெருகூட்டும் அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய தாய், சிகிச்சையின் போதே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Leah Cambridge (29) என்ற பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடிகைகளை போல, தானும் பின்னழகை பெற்றிருக்க வேண்டும் என்ற ஆசையில் துருக்கிக்கு சென்றுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் பின்னழகு அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் பிரபலமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்காக அவர் £3,000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளார்.
அங்கு அறுவை சிகிச்சை நடைபெறும்பொழுதே Leah இறந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
இதுகுறித்து அவருடைய கணவர் Scott (31) தன்னுடைய முகநூல் பக்கத்தில், அதற்குள் என்னுடைய குட்டி செல்லம் விடைபெறுவாள் என நினைத்து கூட பார்க்கவில்லை.
இது மிகவும் துயரமான ஒரு தருணம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இப்பொழுது நொறுங்கிப்போன மனதுடன் இருக்கிறேன். என் வாழ்க்கையே சிதைய ஆரம்பித்துவிட்டது.
Leah இல்லாத ஒரு வீட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
தற்போது Leah-வின் உடலை பிரித்தானியாவிற்கு கொண்டு வருவதற்காக Scott துருக்கி விரைந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
