பிரபல இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி? வெளியான தகவல்

597

பிரபல இயக்குனர் மணிரத்னம் வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தளபதி, ரோஜா, நாயகன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ள மணிரத்னம் தற்போது சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இது குறித்து மணிரத்னத்தின் செய்தித்தொடர்பாளர் நிகில் டுவிட்டரில் தெரிவிக்கையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மணிரத்னம் சென்றுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை மணிரத்னத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் நலம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.