பிரபல திரைப்பட நடிகர் விஷாலை அதிரடியாக கைது செய்த போலீசார்!!

1725

நடிகர் விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்ற போது பொலிசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். தமிழ்த் திரைப்பட ‌தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடை‌‌யிலான மோதல் இருந்து வந்த நிலையில் அந்த மோதல் தற்போது முற்றியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை தலைவர் விஷால் பாண்டிச்சேரியிலிருந்து சங்கத்துக்கு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்பு நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர்.

இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர். அப்போது பொலிசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், விஷால் தரப்பினருக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

இது குறித்து விஷால் கூறுகையில், இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் ‌வழங்கப்படும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். பூட்டப்பட்டிருக்கும் பூட்டை உடைத்தே தீருவேன் என்று தெரிவித்தார். அதற்கு பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது.

சட்டவிரோதமாக கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று பொலிசார் எச்சரித்தனர். இருப்பினும் விஷால் தொடர்ந்து பூட்டை உடைக்க முயன்றதால், அவர் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.