பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை : மனைவி பரபரப்பு புகார்!!

742

பவர்ஸ்டார் சீனிவாசன்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.