பிரபல நடிகை லதா தோள் மேல் கை வைத்தது யார்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

1085

நடிகை லதா

தமிழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை லதா தோள் மேல் கை வைத்த புகைப்படம் கடந்த மூன்று தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து புகழ் பெற்ற நடிகை லதா, எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவருக்கு பின் காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசுடன் இணைந்து அரசியல் ரீதியாக பணியாற்றினார். இதையடுத்து திருநாவுக்கரசரிடம் இருந்து விலகி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் லதா இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது, ஓபிஎஸ் தலைமையில் செய்லபட்டு வந்த அணிக்கு ஆதரவை அளித்து வந்தார். இதன் காரணமாக அவ்வப்போது நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருடன் நடிகை லதாவும் கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த யாரோ லதாவின் தோள் மேல் கை வைத்துள்ளனர். அந்த கை அமைச்சர்கள் கையா? அல்லது வேறு யாருடைய கையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை போட்டேஷாப் செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.