பிரபல பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்! புகைப்படங்கள் உள்ளே!

817

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் வாக் ஃபேஷன் பத்திரிகையின் அட்டையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த மாதம் யூன் 1 ஆம் திகதி வெளியாகியுள்ள பிரதியில் அவரது புகைப்படம்‌ இடம்பெற்றுள்ளது. ‌வாக் பத்திரிகையில் ஜான்வியின் பேட்டியும் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூரை பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் பேட்டி கண்டுள்ளார். அந்தப் பேட்டியில் தான் நடிக்க வருவதை அவரது தாய் ஸ்ரீதேவி விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தனது முதல் படமான தடக் படத்தின் 25 நிமிட காட்சிகளை தாய் ஸ்ரீதேவி பார்த்துவிட்டு மேக் அப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக ஜான‌வி கபூர் நினைவு கூர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டாகி வரும் வாக் ஃபேஷன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஜான்வியின் புகைப்படங்கள்…..