பிரபல பெண் இயக்குநர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

855

பெண் இயக்குநர்

மும்பையில் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் கல்பனா லஜ்மி இன்று அதிகாலை மரணமடைந்தார். ஹிந்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தவர் கல்பனா லஜ்மி(64). மாற்று சினிமா இயக்குநராக பாராட்டப்பட்ட இவர் இயக்கிய ‘ருடாலி’ திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

மேலும், இத்திரைப்படம் இந்தியா சார்பில் வெளிநாட்டுப் பிரிவுக்கான 66வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கல்பனா லஜ்மி, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு மும்பையில் கல்பனா லட்சுமி மரணமடைந்தார்.

ஹிந்தி திரையுலக பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடக்கிறது