வரலட்சுமி சரத்குமார்

கடந்த வருடம் அதிக படம் நடித்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். நடிகர் சரத்குமாரின் மகளான இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஜய்யின் சர்கார், விஷாலுடன் சண்டக்கோழி-2 போன்ற தனது நடிப்பை பாராட்டும் வகையில் சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் வரட்சுமி. மேலும் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் தான் நடத்திவரும் சேவ் சக்தி என்ற அமைப்பின் மூலம் 24 நபர்களுடன் தானும் உடல் தானம் செய்துள்ளார்.
