பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை தூக்கி வீசப்பட்ட அவலம்: அதிர்ச்சி சம்பவம்!!

653

சீனாவில் பிறந்து சில நிமிடங்களே ஆகியிருந்த பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியோடு ஆறடி சுவருக்கு அந்த பக்கம் உள்ள மோசமான கழிவுகள் நிறைந்த இடத்தில் வீசியுள்ள அதிர்ச்சி சம்பம் நடந்தேறியிருக்கிறது.

காவல்துறையின் அறிக்கை படி கிழக்கு சீனாவில் புஜியான் மாகாணத்தில் உள்ள Fuzhou நகரத்தின் மாவே மாவட்டத்தில் Xiade எனும் கிராமத்தில் வசிப்பவர்கள் சம்மந்தப்பட்ட பெண்குழந்தையை முதலில் கண்டுபிடித்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரால் கைவிடப்பட்டு தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையை மாவே மாவட்ட மருத்துவமனையில் கிராமத்தார்களே கொண்டு சேர்த்துள்ளனர். அதன் பின் அக்குழந்தை அங்கிருந்து Fuzhou நகரத்தின் முதன்மை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொப்புள் கோடி கூட அகற்றப்படாத நிலையில் வீசப்பட்ட அந்த பெண்குழந்தையின் தலையில் பிராக்ச்சர் ஏற்பட்டுள்ளது என்றும் மண்டை ஓடு உள்ளே ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்குழந்தையின் மூட்டுக்கள் சேதமடைந்திருப்பதாகவும், வாயின் அருகே காயங்கள் இருந்ததாகவும் , அது மட்டும் இன்றி இருதயம் மற்றும் நுரையீரல் இரண்டிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு பின் அக்குழந்தை தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரை தானாகவே வந்து சரணடைந்து விடும்படியும் குழந்தையை கொண்டு போக கூறியும் பொலிஸார் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட தாய் தகப்பனை அடையாளம் கண்டால் காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி குழந்தையை காப்பாற்றிய கிராமத்தாரிடம் கூறியிருக்கின்றனர்.