பிறப்புறுப்பில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த கர்ப்பிணி: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

960

மெக்ஸிகோ நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிறப்புறுப்பில் 1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Gloria (37) என்ற பெண்மணி தனது வயிற்றில் குழந்தையின் அசைவை தான் உணரவில்லை என கூறி, Ruben Lenero மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு, இவரை பரிசோதித்த போது, குழந்தையின் இதயதுடிப்பு இல்லை, இதனைத் தொடர்ந்து பிரசவ விடுதிக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டபோது, இவர் கர்ப்பிணி இல்லை என்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவரது வயிறு மற்றும் பிறப்புறுப்பில் 1 கிலோ மதிப்புள்ள கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு, இவர் மீது ஆரோக்கியத்திற்கு எதிரான குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், இந்த கஞ்சா எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது என தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டில் கஞ்சா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.