புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியில் திரையுலகம்!!

905

பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.காதலர் தினம் போன்ற முக்கிய வெற்றி படங்களில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே மேலும் பல மொழிகளில் நடித்தவர்.

பின் 2002ஆம் ஆண்டு கோல்டி பெஹல் என்பவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலானார், கோல்டி பெஹல் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

2005 ஆம் ஆண்டில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திரைப்படங்களில் இருந்து ஒதுங்கிய சோனாலி அவ்வப்போது தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.இந்நிலையில் தான்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்க்கை விசித்திரமானது நீங்கள் எதிர்பார்க்காதது நடந்து விடும் என்றும் உடலில் திடீரென ஏற்பட்ட வலியால் நான் மருத்துவரை நாடினேன்.அப்போதுதான் என்னை சோதித்த மருத்துவர் எனக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.

எனினும் சிகிச்சை காரணமாக நான் அமெரிக்கா செல்ல போகிறேன், புற்றுநோயோடு போராடி கண்டிப்பாக நோயை வென்று வருவேன் எனக்கு என் குடும்பத்தினர் பக்கபலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.