பு கையி லைக்கு…
பல நாடுகள் பு கையி லைக்கு எ தி ராக பி ரச்சா ரம் செய்யும் நிலையில், நே ர்மா றாக , சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவை, பு கையி லை வி ளம்ப ரத்தைக் க ட்டுப்ப டுத்தவேண்டும் என்று கோரியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பு கையி லை நிறுவனங்கள், சிறுவர்கள் பயன்படுத்தாத புத்தகங்கள் மற்றும் இ ணை யதளங்களில் தங்கள் பு கை யிலை தயாரிப்புகளை விள ம்பர ப்படுத்துவதை கண்டிப்பாக தொடர்ந்து அனுமதிக்கவேண்டும் என்று கூறியுள்ளது சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவை.
அத்துடன், சிறுவர்களுக்கானவை அல்லாத நிகழ்ச்சிகளை பு கையி லை நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது. த ற் போதைய சூழ லில், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் மட்டுமே பு கையி லை விளம்பரம் செய்ய தடை உள்ளது.
என்றாலும், சிறுவர்கள் பயன்படுத்தாத புத்தகங்கள் மற்றும் இணையதளங்களில் தங்கள் பு கையி லை தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதை அனுமதிக்கவேண்டும் என்று வாக்களித்துள்ள அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது இடங்களில் அனைவர் பார்வையிலும் படும் வகையில் பு கையி லை தொடர்பான விளம்பரப்பலகைகள் வைப்பதை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.