லண்டனில் தனது வீட்டில் படுத்திருந்த பெண் காலையில் கண் விழித்து பார்த்தபோது 3 அடி நீளமும் கொண்ட மலைப்பாம்பு தனது படுக்கையில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாண்டர் என்ற பெண்மணி வழக்கம்போல தனது வீட்டில் தூங்கிகொண்டிருந்த இவர் கண்விழித்து பார்த்தபோது 3 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இவருக்கு அருகில் படுத்திருந்துள்ளது.
இதனைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியில் உறைந்து, அங்கிருந்து ஓடியுள்ளார். பாம்பினை பிடிப்பதற்காக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான RSPCA – க்கு போன் செய்துள்ளார்.
ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக பாம்பு குடியிருப்பின் ஜன்னல் வழியாக தப்பித்து ஒடியுள்ளது. இந்த ஏழ்மையான குடியிருப்பில் இதுபோன்ற ஊர்வனங்கள் நுழைவது சுலபமாக உள்ளது. கண்டிப்பாக இந்த மலைப்பாம்பினை அருகில் உள்ள யாரேனும் வளர்த்திருக்க வேண்டும்.
அங்கிருந்தான் இது ஜன்னல் வழியாக வந்துள்ளது என RSPCA அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.