பெண் பேச மறுத்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

462

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் புதுமாப்பிள்ளை ஒருவர் வீடியோ காலில் நேரலையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையை சேர்ந்தவர் சுரேஷ் (31), வழக்கறிஞர். இவர் புதுவை சட்டக்கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த கடலூரை சேர்ந்த பெண்ணை காதலித்தார். அதை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 27ம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த பெண் திடீரென்று சுரேசுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அ திர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேச முயன்ற அவரை அந்த பெண் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் சம்பவத்தன்று இரவு அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் பேசினார்.
அப்போது நீ என்னுடன் பேச மறுத்ததால் நான் த ற்கொ லை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்து நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூ க்கு மாட்டினார். அதன்பிறகு அலைப்பேசி துண்டிக்கப்பட்டது.

ஏதோ விளையாட்டுக்குத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என்று அந்த பெண் கருதினார். இருப்பினும் ப தற்றம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தி என்பவரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் சுரேஷ் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சுரேஷ் தூ க்கில் தொ ங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அ திர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இற ந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கடலூரில் இருந்து அந்த பெண்ணும் புதுவைக்கு வந்தார். அவரிடம் சுரேசின் ம ரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.