இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு

ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தின் ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால், இளம் ஜோடியினர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் Alwal பகுதியை சேர்ந்த இளம் ஜோடியினர் மனிஷ் (20) மற்றும் அக்சயா (18). தூரத்து சொந்தங்களான இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அக்சயாவின் பெற்றோர் மகளை காணவில்லை என பொலிஸாரிடத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் Sri Chakra complex-ல் அறை எடுத்து தங்கவிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்த பொலிஸார் ஒவ்வொரு தளமாக சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் இருவீட்டாரின் பெற்றோர்களும், தங்களுடைய இருப்பிடத்தை கண்டறிந்து விட்டனர் என்பதை அறிந்த இருவரும் உடனடியாக 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.