பெற்றோர் கையால் பறிபோன மகன் உயிர் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

932

மதுரை….

மதுரை சொக்கலிங்கம் நகர் பகுதியில் நாகராஜன் குருவம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வடை கடை வைத்து வாழக்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் மாரிச்செல்வம் என்பவர் தொழிற்கல்வி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் எந்நேரமும் குடிபோதையில் இருந்துள்ளார்.

குடிபோதையில் வரும் போதெல்லாம் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகள் பேசுவதோடு மட்டுமின்றி அவர்களை தாக்குவதையும் வாடிக்கையாத வைத்துள்ளார்.

நேற்று இரவு மாறிச்செல்வம் வழக்கம் போல் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என நோக்கித்தில் சென்று கொண்டிருந்த சம்பவம் மர்டரில் முடிந்தது.. மது போதையில் வந்த மாறிச்செல்வம் தகரில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஸ்கிப்பிங் கயரை கொண்டு மகனின் கழுத்தை நெறித்துள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்வம் துடிதுடித்து இறந்துள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இருவரும் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் மகன் தொடர்ந்து தங்களை துன்புறுத்தி வந்ததால் கொலை செய்து விட்டோம் என்று சொல்லி ஆஜராகி உள்ளனர்.

எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரே சொந்த மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.