பெற்ற தாயை தலையணையால் அழுத்தி கொன்ற மகன்! முகம் சுழிக்க வைக்கும் காரணம்..

1321

தருமபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார். சாந்தியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் சாந்தியின் வீட்டிற்கு அவ்வப்போது வெளியாட்கள் வந்து போயுள்ளனர். இதனால் மகன் நவீன்குமார் தாய் சாந்தியை அவ்வப்போது கண்டித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத சாந்தி தொடர்ந்து வெளியாட்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் நவீன்குமாருக்கும் அவரது தாய் சாந்திக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாந்தி நவீன்குமாரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். கடும்கோபமடைந்த நவீன்குமார், தாய் என்றும் பாராமல் அவர் முகத்தின் மேல் தலையணையை அமுக்கி கொடூரமாக கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நவீன்குமாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.