இளைஞர்

இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த் மெஹ்ரா. சித்தார்த் சமீபத்தில் விபத்தில் சிக்கியதில் அவரது கால்கள் சேதமடைந்து, அதில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.
இதையடுத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க திட்டமிட்ட சித்தார்த் இணையத்தில் தன்னை ராணுவ அதிகாரி என பதிவு செய்தார்.
சித்தார்த்தின் ஆங்கிலத்தில் மயங்கி பல பெண்கள் அவரது வலையில் விழுந்தனர்.
அவர்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த சித்தார்த் ராணுவ வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கப்போவதாகவும் அதற்கு முன் பணம் கொடுத்து உதவும்படியும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
பணம் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தொடர்பை துண்டித்து விடுவது இவரது வழக்கம். சமீபத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் பொலிசில் புகார் அளித்ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து சித்தார்த்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் இதுவரை 50 பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.