பேனாவில் கமராவை மறைத்து வைத்து ஆபாச படம் எடுத்த நபர் கைது

1141

சுவிட்சர்லாந்தில் 52 வயது நபர் ஒருவர் பேனாவில் கமராவை மறைத்து வைத்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் மகள்களை ஆபாசமாக படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சிறுமிகள் அவர் வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தும்போது அங்கு அந்த பேனாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவால் ரகசியமாக அவர்களை படம் எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த இரண்டு சிறுமிகலும் விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது அவர் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான அந்த நபர் குழந்தைகள் ஆபாச படங்களை டவுன்லோடு செய்ததாகவும், இன்னொரு வீட்டுக்காரரின் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக சென்றபோது அந்த வீட்டிலுள்ள குடும்ப புகைப்படங்கள் அடங்கிய CD ஒன்றை கையகப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் சாட்சியமளித்த மனநல நிபுணர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் சிறுவனாக இருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலில் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் பின்னர், அவருக்கு மனநல சிகிச்சையும் 34,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.