பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

1288

மதுரை…

பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இன்று காலை பள்ளிக்கு புறப்பட்ட அவர் கூட்டமாக இருந்த அரசுப்பேருந்தில் ஏறியுள்ளனர்.

மேலும் சக மாணவர்களுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்போது குரு தியேட்டர் அருகே பேருந்து வந்தபோது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில், பேருந்தின் டயர், மாணவர் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.