போலீசையே கலங்க வைத்த கொலை… அதிர்ச்சிகர சம்பவம்!!

1479

தமிழ்நாட்டில்…..

தமிழ்நாட்டில் குடும்ப வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரதட்சணை கொடுமையால் மனைவியை கொலை செய்வது மற்றும் அதையொட்டி நடக்கும் தற்கொலை சம்பங்கள் என வரும் செய்திகள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையும், நடத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசிய கணவனின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இருவரும் பெருமுகை பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். குழந்தையின்மை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல்வேறு நேரங்களில் சண்டையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி ராமு ரத்தினகிரி காவல் நிலையத்தில் சென்று தனது மனைவி சரிதா காணவில்லை என புகார் அளித்தார்.

பின்னர் புகார் தெரிவித்த நிலையில் ராமு கே.ஜிஎப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ராமு குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ரத்தினகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.