மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை : நள்ளிரவில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

821

தூக்கில் தொங்கிய தந்தை

சென்னையில் தனது 1½ வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரததில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. சுரோஷ், ஜெயா தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகள் உள்ளான். சுரேஷ் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வீட்டின் அறையில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் குழந்தை கிஷோரும் பிணமாக கிடந்தான். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், ஜெயா இருவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், அவரது வீட்டில் பொலிசார் சோதனை செய்தபோது, சுரேஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளேன். ஜெயா என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.

எனது அக்கா கணவர் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார். என்னால் நகை, பணம் கொடுக்க முடியவில்லை. எனவே எனது அக்கா கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போட வேண்டாம். மகன் கிஷோரை விட்டு செல்ல மனம் இல்லை.

எனவே அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது. சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் பால் பாட்டிலில் வி‌ஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து உள்ளார். அந்த பாலை குடித்த குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கானத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.