மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.!

875

அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பீட்ஸாவை கொள்ளை அடித்து கொண்டு அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது நீதிபதி ,ஒருவர் குற்றவாளி என கூறி 31 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.

இதனை பார்த்த சலாவுதீன் ஜிட்மவுட் தந்தை அந்த குற்றவாளியை கட்டி அணைத்துகொண்டு தமது மகன் மற்றும் மனைவி சார்பில் மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.இந்த சம்பவத்தை கண்ட நீதிபதி உட்பட அங்கிருந்தவர் பலரும் கண்கலங்கியுள்ளனர்.