மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த கொடூர தாய் : கண்ணீர் விட்டு கதறிய சிறுமியின் பரிதாப நிலை!!

1212

தமிழகத்தில் மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கன்னிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (44). கூலித் தொழிலாளியான இவருக்கு சக்தி(40) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்தியின் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். சக்தியின் அண்ணனான ரவிக்கு, சாந்தி(32) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இப்படி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற போது, விக்கிக்கும், சாந்திக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விடயம் ரவிக்கு தெரியவர உடனடியாக சாந்தியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். அதுமட்டுமின்றி விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இதையடுத்து சாந்தி, தனது குழந்தைகளுடன் ஆர்.கே.பேட்டை அருகே தேவலம்பாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். அதன் பிறகு மனைவியை விட்டு பிரிந்து வந்த விக்கி சாந்தியை 2-வது திருமணம் செய்துள்ளார்.

சாந்தி மற்றும் அவரது குழந்தைகளுடன் விக்கி ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது 8-ஆம் வகுப்பு படிக்கும் சாந்தியின் மகளின் மீது விக்கிக்கு ஆசை வந்துள்ளது. இதனால் மாணவிக்கு பல முறை விக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 31-ஆம் திகதி சாந்தியின் உதவியுடன் சிறுமி என்று கூட பாராமல் விக்கி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பெரிதும் வேதனையில் இருந்த அந்த சிறுமி மறுநாள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

அதுமட்டுமின்றி நான் வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பின் இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்ததால், சிறுமியின் தாய் சாந்தி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.