மதுபோதையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: அதிர்ச்சி சம்பவம்!!

635

புதுச்சேரியில் மதுபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் அதிக மதுப்பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக மனைவி சரஸ்வதியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மதுபோதையில் இருந்த ஆறுமுகம் மீண்டும் குடிப்பதற்கு சரஸ்வதியிடம் பணம் கேட்டுள்ளார்.பணம் தர சரஸ்வதி மறுத்த நிலையில் அவருடன் ஆறுமுகம் சண்டை போட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் உருட்டுக் கட்டையால் சரஸ்வதியை கடுமையாக தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் ஆறுமுகம் தப்பியோடிவிட்டார், சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சரஸ்வதி சடலத்தை கைப்பற்றிவிட்டு ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.