பிரித்தானியாவில் கணவரை பிரிந்த மனைவி ஓரினச்சேர்க்கையாளராக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
West Midlands கவுண்டியை சேர்ந்தவர் வில்லியம் பில்லிங்கம், இவர் மனைவி டிரேஷி டவுண்டரி, தம்பதிக்கு மயிலி என்ற மகள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். டிரேஷிக்கும், வில்லியமுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துள்ளனர்.
டிரேஷி திடீரென ஓரினச்சேர்க்கையில் தனது தோழியுடன் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அதுகுறித்து கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டது.
இதனால் மனைவி டிரேஷி மீது கோபத்தில் இருந்த வில்லியம், அவர் வீட்டுக்கு வந்து அங்கிருந்த தனது மகள் மயிலியை கத்தியால் மார்பில் குத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த டிரேஷியையும் கத்தியை காட்டி வில்லியம் மிரட்ட அவர் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயிலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்த நிலையில் பொலிசார் வில்லியமை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை அவர் மறுத்தார்.
தொடர்ந்து வில்லியம் மீதான விசாரணை நடந்து வருகிறது.
