இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் கடிதத்தை கடைசி வரை படிக்காமலேயே போனது தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்திய ராணுவம் சார்பில் கலந்து கொண்டார்.
சிம்லாவில் ராஜேஷ் இருந்த நிலையில் அவர் மனைவி உத்தரகாண்டில் இருந்தார். கணவரை பல நாட்களாக பார்க்காததால் ராஜேஷுக்கு அவர் மனைவி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
கடிதமானது ராஜேஷுக்கு வந்து சேர்ந்த நிலையில் யுத்தம் சம்மந்தமான வேலையில் இருந்ததால் அவர் அதை பிரித்து படிக்கவில்லை.
யுத்தம் முடிந்தபின்னர் கடிதத்தை படிக்கலாம் என ராஜேஷ் நினைத்தார், ஆனால் துரதிஷ்டவசமாக ராஜேஷ் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.
இதன்பின்னர் ராஜேஷின் சடலம் ராணுவ உடையுடன் அவர் குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவரின் சட்டை பாக்கெட்டில் மனைவி எழுதிய கடிதம் அப்படியே பிரிக்காத நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து ராஜேஷ் மனைவி கதறி அழுதுள்ளார்.
இன்று கார்கில் போர் வெற்றி தினம் நினைவுகூறப்படும் நேரத்தில் இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகடிர் குஷல் பகிர்ந்துள்ளார்.