கேரளா…..
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காணகாரி பகுதியை சார்ந்தவர் பிரதீப் .இவருடைய மனைவி மஞ்சு இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பிரதீப் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர் என்று கூறப்படுகிறது.குடித்துவிட்டு வீட்டில் வரும் பிரதீப் தனது மனைவி மஞ்சுவரிடம் தினசரி தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக நடைபெறும் சண்டை என்பதால் அப்பகுதி மக்கள் யாரும் குடும்ப சண்டையில் தலையிட வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரதீப், மஞ்சுவிடம் காலை முதல் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு ஒரு கட்டத்தை தாண்டி முற்றவே வீட்டில் இருந்த அரிவாள் ஒன்றை எடுத்தது தனது மனைவியின் இரு கைகளின் விரல்களையும் வெட்டியுள்ளார்.
அதில் ஒரு கையின் முழு விரல்களும் துண்டிக்கப்பட்டன். மற்றொரு கையின் விரல்கள் முறிந்து விழும் நிலையில் இருந்தன.இதை தடுக்க சென்ற தனது இரு மகன்களையும் தாக்கியுள்ளார் அவர்.
இந்த சம்பவம் அரங்கேறியதும் பிரதீப் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார்.மஞ்சுவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சுவை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதீபை கோட்டயம் போலீசார் தேடி வருகின்றனர்.