மனைவியைத் திட்டியதால் ஆத்திரம்.. தம்பிக்கு அண்ணன் கொடுத்த கொடூர தண்டனை!!

1409

ஆந்திர…

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவருக்கு தம்பி ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாகப் பேச அண்ணன் வெங்கடேஸ்வரலு, வீட்டிற்குத் தம்பி ஏடு கொண்டலு சென்றுள்ளார்.

அப்போது வெங்கடேஸ்வரலு வீட்டில் இல்லை. இதனால் கடுப்பான தம்பி ஏடு கொண்டலு, அண்ணன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

பிறகு தம்பி ஏடு கொண்டலு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த மனைவி நடந்தவற்றைக் கணவனிடம் கூறியிருக்கிறார். மனைவியை ஆபாசமாகத் திட்டியதால் தம்பியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் அண்ணன் வெங்கடேஸ்வரலு.

இதன்படி நேற்று ஏடு கொண்டலு சாலையில் நடந்து சென்றபோது அவர் மீது அண்ணன் வெங்கடேஸ்வரலு திட்டமிட்டபடி, கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

சொந்த தம்பியை அண்ணனே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.