
மகனின் மனைவியுடன் 5 வருடங்கள் தவறான உறவு வைத்ததை கண்டு பிடித்த மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் இராணுவ வீரரும் கவுன்சிலருமான 62 வயதான ஸ்டீபன் தனது மகனின் மனைவியின் (அப்போது காதலி) பாட்டி உடல் நலம் குன்றி இருக்கும் போது அவரைப் பார்ப்பதற்காக சென்ற போது தன்னோடு உறவு வைத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
நீண்டகால தொந்தரவால் தனது கணவரின் தந்தையின் ஆசைக்கு இணங்கியிருக்கிறார் மகனின் காதலிஇவ்வாறு மாமன் மருமகளின் முறைகேடான உறவு 5 வருடங்கள் கடந்த நிலையில் இன் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இவ்வாறிருக்க ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் உச்சகட்ட வெறுப்பினாலும், கோவத்தினாலும் மனைவி கத்தியை எடுத்து ஸ்டீபனை குத்த முயன்ற போது அவரைத் தடுத்து மனைவியின் கையிலிருந்த கத்தியை பறித்து அவரை செயலிழக்கச் செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
மனைவி இறந்த பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு அவரே அழைப்பை ஏற்படுத்தி தனது மனைவியை தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஸ்டீபனை கைது செய்ததோடு விசாரணை நடாத்தியதில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாலும் 14 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து அந் நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது
இந் நிலையில் ஸ்டீபனின் மகன் தனது மனைவியை மன்னித்து விட்டதாகவும் ஆனால் தனது முதல் கதாநாயகனான தந்தையை ஒரு போதும் மன்னிக்க போவதில்லை என நீதி மன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.