மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவன் : நிக்கா ஹலாலா என்ற பெயரில் செய்தததாக மனைவி புகார்!!

651

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிக்கா ஹலாலா என்ற பெயரில் தன் கணவன் உட்பட 4 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது கணவன் தனக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கொடுத்ததாகவும், அதன் பின் தான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொண்ட நபர் மூன்றே மாதத்தில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நிக்கா ஹலாலா என்ற பெயரில் தனது கணவன் உள்ளிட்ட4 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், அந்தப் பெண்ணின் கணவன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் நிக்கா ஹலாலா என்றால் இஸ்லாத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவி விவாகரத்து செய்துவிட்டால், அந்த மனைவி மீண்டும் தன் கணவருடன் வாழ்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

விவாகரத்து பெற்ற பெண் வேறொரு நபரை திருமணம் செய்து, அவரிடமிருந்து விவாகரத்து பெற்றால் மட்டுமே பழைய கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழமுடியும்.

அப்படி இல்லையெனில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவர் இறந்தால் தான் பழைய கணவருடன் மீண்டும் சேர முடியும்.