இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் மனைவியை மிஸ் செய்வதாக கூறியுள்ளதால், பிசிசிஐயின் நடவடிக்கை சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 1-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணி என்பதாலும், மைதானங்கள் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாலும், இந்திய அணி ஆட்டத்தில முழு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் வீரர்கள் தங்கள் மனைவிகள், தோழிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடமிருந்து 3 டெஸ்ட் போட்டிகள் வரை விலகி இருக்குமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது நீண்ட தொடர் என்பதால், இந்திய வீரர்கள் பலர் தங்கள் மனைவிகளை மிகவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர்.இருப்பினும் பிசிசிஐ இந்த உறவை பிறப்பித்துள்ளதால், ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
இந்நிலையில் காயம் காரணமாக சகா டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கிடைத்தது.
பயிற்சி ஆட்டத்திலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதையடுத்து இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியை மிகவும் மிஸ் செய்வதாக மனைவியுடன் இருப்பது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் தற்போது நல்ல மனநிலையில் ஆடி வருகிறார். பயிற்சி ஆட்டத்தில் 82 ஓட்டங்கள் அடித்தார்.டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சரிவர வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஆனால், டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயம் இவருக்கு உள்ளது.
இதற்கிடையில், தங்களது மனைவி மற்றும் தோழிகளை பிரிந்து வாடும் வீரர்கள் நல்ல மனநிலையில் ஆடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.