ஓட்டம் பிடித்த நடிகர்
பயபுள்ள என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சிவா மனைவி இருக்கையில் இளம்பெண் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட சிவா, சென்னை ராமாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். பயபுள்ள படத்தில் நடித்த பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
மனைவி இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சிவா, பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை காட்டி பக்கத்து வீட்டில் வசித்து வந்த பி.இ. பட்டதாரி பெண்ணை வர்ணித்து மயக்கி உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுடன் அழைத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார் சிவா. தனது மனைவியை பிரிந்து வாழ்வது போன்று நடித்து அப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே திருமணமான சிவா, தங்கள் மகளை மயக்கி அழைத்துச்சென்றதால், தங்கள் மகளின் எதிர்காலமே வீணாகி விட்டதாக கண்ணீர் வடிக்கும் பெண்ணின் குடும்பத்தினர் விரைவாக தங்கள் மகளை மீட்டுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.