மனைவி உறவுக்கு மறுத்ததால் கணவன் செய்த கொடூர செயல் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1616

மத்தியப்பிரதேசம்….

மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் வசிப்பவர் ரத்தோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது.

சில வருடங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, அவரை மணந்த அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் இதேபோல மகிழ்ச்சியாக வாழப் போவதாக எண்ணினார், ஆனால் கணவன் நாளடைவில் தனது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்தார்.

அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இந்நிலையில் கடந்தசில தினங்களுக்கு முன்னர் மதியம் வீட்டில் சுத்தமாக குளித்துவிட்டு உடைகளை அணிந்து கொண்டு வெளியே புறப்பட தயாரானார் கணவர், சிறிது நேரத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரம் அடைந்த ரத்தோர் மனைவியை கடுமையாக அடித்து உதைத்தார்.

மனைவிக்குச் சரியான பாடம் புகட்டவதாக எச்சரித்த அவர், மனைவியின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினார், பின்னர் மனைவியின் கை கால்களை கட்டினார், வீட்டில் இருந்த ஃபெவிக்விக்கை எடுத்து மனைவியின் அந்தரங்க உறுப்பில் ஊற்றி சாடிஸ்ட் போல நடந்துகொண்டார்.

அப்போது மனைவி அவமானம் தாங்க முடியாமல் அலறினார், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மனைவியின் அந்தரங்க உறுப்பில் கணவனின் ஃபெவிக்விக் ஊற்றிய காரணம் குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தனர், போதைக்கு அடிமையானதால் குடிக்கப் பணம் கேட்ட தாகவும் அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால், அக்கொடூரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் கணவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.