தமிழ்நாட்டின் ஈரோட்டில் மனைவியின் கண் முன்னே பெண்ணொருவர் துடிதுடிக்க கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வக்குமார் (25) என்பவரது மனைவி பெயர் லீலாவதி, செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி. லட்சுமி கடந்த 3-ஆம் திகதி தனது கணவரை விட்டு இன்னொருவருடன் ஓடிப்போய்விட்டார்.
இதனால் குடும்பமே ஆடி போன நிலையில் செல்வகுமார், எங்கெங்கேயே தேடி கடைசியில் சங்ககிரியிலிருந்து கடந்த 6-ம் திகதி லட்சுமியை மீண்டும் அவரது வீட்டுக்கு கூட்டி வந்து விட்டு சென்றார். இதனால் செல்வகுமார் மீது லட்சுமி கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று செல்வகுமார் தனது மனைவி லீலாவதியுடன் வெளியில் சென்று லட்சுமி வீட்டு வழியே வந்து கொண்டிருந்தார். செல்வகுமாரை கவனித்த வந்த லட்சுமி, வீட்டிலிருந்து ஓடி வந்து தகராறில் ஈடுபட்டார், என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய்? அப்படியே என்னை விட்டிருக்க வேண்டியதுதானே என்றார்.
பின்னர் திடீரென லட்சுமி மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்வக்குமாரை பயங்கரமாக தலையில் தாக்கினார். இதில் செல்வக்குமாருக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து செல்வக்குமாரின் மர்ம உறுப்பில் பலமாக எட்டி உதைத்தார். இதில் செல்வக்குமார் சுருண்டு விழுந்து இறந்தே போய்விட்டார். இவ்வளவும் செல்வகுமாரின் மனைவி லீலாவதி முன்பே நடந்து முடிந்தது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் லட்சுமி உறவினர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.