மன்னித்து விடுங்கள் : ஒன்றாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

721

தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்

சென்னையில் தீபாவளி சீட்டை திருப்பி தர முடியாததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமலா தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அமலா அவர் பகுதியில் வசிக்கும் நபர்களிடம் பணம் பெற்று சீட்டுக் கம்பெனி நடத்தியுள்ளார். இவர்களிடம் 275 பேர் சீட்டு பணம் கட்டியுள்ளனர். சீட்டு சேர்த்ததன் மூலம் வாங்கிய பணத்தை ஜோஷ்வா பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இந்நிலையில் பங்குச் சந்தையில் போட்ட மொத்த பணமும் நஷ்டம் ஏற்பட்டது.

சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்கத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த அமலாவும் ஜோஷ்வாவும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து அவர்கள் ஆசையாய் வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொன்றனர். பின்னர் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அமலாவும், ஜோஷ்வாவும் வீட்டை விட்டு இரண்டு நாட்கள் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள். அதில், சீட்டுக் கம்பெனியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களிடம் பணம் கட்டியவர்கள் மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.