மயக்க நிலையில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் : தாயாக மாறிய பொலிசாரின் நெகிழ்ச்சி புகைப்படம்!!

776

தமிழகத்தில் சாப்பிடாமல் மயக்க நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, பொலிசார் ஒருவர் உணவு ஊட்டி உபசரித்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக, அங்கிருக்கும் மக்கள் அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் சாப்பிடததால், மயங்கியநிலையில் இருக்கிறார் என்பதை அவர் அறிந்துள்ளார்.

இதனால் அவர் உடனடியாக அருகிலிருக்கும் ஹோட்டலுக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து அவரே ஊட்டிவிட்டார்.

மேலும் அவர் உடல்நிலை நலியுற்று நிலையில் இருந்ததால், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு அதன் பின், அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

காவல் துறையினரின் இந்த மனிதநேயச் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவர் அவருக்கு சாப்பாடு ஊட்டியது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.