மரண வீட்டில் சவப்பெட்டியை திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

950

காலி – யக்கமுல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக அஹங்கம பிரதேசத்தில் உயிரிழந்த மற்றொரு நபரின் சடலத்தை யக்கமுல்லயில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் உறவினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அஹங்கம – மெலியகொட பிரதேசத்தில் 65 வயதான நபர் அண்மையில் உயிரிழந்ததோடு, அவரின் உடல் வெலிகம பகுதியில் உள்ள மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது அந்த மலர்சாலையில் மேலும் இரண்டு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அங்கு சடலங்களுக்கான இறுதி அலங்கரிப்பு மற்றும் உடை அணிவிக்கும் பணிகள் நடைபெற்றன. குறித்த பணிகள் நிறைவுற்றதன் பின்னர் சவப்பெட்டியின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்களின் கவனக்குறைவால் பூதவுடல்களுக்கான முகவரிகள் மாற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் உடலை உடலுக்குரிய முகவரிக்கு கொண்டு செல்லாமல் வேறு முகவரிக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர் அமரர் ஊர்தியின் சாரதியும் உதவியாளரும்.

பின்னர் உறவினர்கள் சவப்பெட்டியின் கதவுகளை திறந்த பார்த்ததும் அறிமுகமற்ற பிறிதொரு நபரின் சடலத்தினை கண்டு ஆச்சரியத்திலும், அச்சத்திலும் மூழ்கி பூதவுடலை தவிர்த்து விலகிச் சென்றனர் உறவினர். பின்னர் இந்த விடயத்தை மலர்சாலையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களை சோதனை செய்த போதே யக்கமுல்ல பகுதிக்கு அனுப்ப வேண்டிய சடலதிற்கு பதிலாக, அங்கு அஹங்கம பகுதியை சேர்ந்த நபரின் சடலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.இதன் பின்னர் சடலங்கள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.