மலர்ந்த மற்றொரு காதல் : கள்ளக்காதலியால் காதலனுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

366

நாமக்கல்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி பஞ்சாயத்து தச்சன்காட்டை சேர்ந்தவர் லோகநாதன்.

இவரின் மகன் விக்னேஷ், (25). இவர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (33). இவரும் செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் குமார். குடும்ப தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தற்போது தனது மகள்கள் சுமதி, பிரியதர்ஷினியுடன் வசித்து வருகிறார். செல்லியம்மன் சேகோ பேக்டரி நிர்வாகம் தனது வேலையாட்கள் தங்க பேக்டரின் இருபுறமும் லைன் வீடு கட்டித்தந்துள்ளது.

பேக்டரியின் கிழக்கு பகுதியில் விக்னேஷின் அக்கா சத்யா வீடு உள்ளது. தற்போது இவருடன் தான் விக்னேஷ் மற்றும் அம்மா, அப்பா ஆகியோர் தங்கிவருகின்றனர். பேக்டரியின் மேற்கு புறத்தில் மாரியம்மாள் வீடு உள்ளது.

இதமூலம் விக்னேஷ்க்கும், மாரியம்மாளுக்கும் கடந்த 5 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனிடையே மாரியம்மாளின் உறவினரான ஈரோடு மாவட்டம் சத்தி மெயின்ரோடு கவுந்தப்பாடி நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் குமாருக்கும், (40) மாரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு செல்லியம்மன் பேக்டரி நிர்வாகத்திடம் தனது உறவினர் எனக்கூறி தான் வசிக்கும் வீடு அருகே உள்ள வீட்டில் குமாரை தங்க வைத்துள்ளார். இதனால், மாரியம்மாளுக்கும், விக்னேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த திங்கள்கிழமை காலை மாரியம்மாளின் வீட்டிற்கு விக்னேஷ் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அருகே வசிக்கும் குமாரும் வந்துள்ளான்.

வாக்குவாதம் முற்றவே மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து விக்னேஷின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

விக்னேஷின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், மாரியம்மாள் விக்னேஷின் கன்னத்தில் அறைந்து அவரின் ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார்.

இந்த நிலையில், குமாரும் விக்னேஷை உதைத்து தள்ளியுள்ளான்.உடலில் பற்றி எரியும் தீயுடன் வெளியே வந்த விக்னேஷ், அங்கிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்துவிட்டு, தீக்காயங்ளுடன் அக்கா சத்யா வீட்டிற்கு சென்றுவிட்டார்.