பாடகி சின்மயி
பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ இயக்கம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து பேசி வருகிறார். இவருக்கு, பல பெண்கள் அனுப்பும் பாலியல் புகார்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பெண் ஒருவர், தனது மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து பலமுறை அழுதுள்ளேன், தற்போது நடந்தவை குறித்து பேசுவதற்கு வெளிப்படையாக இருக்கிறேன், நீங்கள் ஏதேனும் கருத்து தெரிவியுங்கள் என சின்மயிடம் கேட்டுள்ளார்.
இதனை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது போன்ற சமூக அமைப்பில் நாம் என்ன செய்கிறோம் என கேள்வி எழுப்பியுள்ளார்.